அமெரிக்காவில்(america) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு நிறத்தில் இருந்த நாய் தற்போது முழுவதுமாக வெள்ளை நிறமாக மாறி உள்ளது.
அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியை சேர்ந்த ஸ்மித் என்பவர் வளர்த்து வரும் பஸ்டர்(Buster) என்ற பெயர் கொண்ட நாயே இவ்வாறு நிறம் மாறியுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பேரிடி: கனேடிய அரசின் அதிரடி முடிவு…!
விட்டிலிகோ பாதிப்பு
தோல் அதன் இயற்கையான நிறத்தை இழந்து வெளிறிய வெள்ளை நிறமாக மாறும் நிலைக்கு விட்டிலிகோ (vitiligo) என்று பெயர். இந்த வகை அரிய நோயால் சில மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விட்டிலிகோ பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நிறம் படிப்படியாக மாறி தற்போது முழுவதும் வெள்ளை நிறமாகி உள்ளது.
வெள்ளை நிறமாக மாறிய இந்த கறுப்பு நாயின் உரிமையாளர் மாட் ஸ்மித், இரண்டே ஆண்டுகளில் தனது செல்ல நாயின் நிறம் முற்றிலும் மாறிய புகைப்படங்களை நெட்டிசன்களுடன் பகிர்ந்துள்ளார்.
கனடாவில் நாற்பது நிமிடங்களுக்கு ஒரு திருட்டு: வெளியான அதிர்ச்சி தகவல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |