Home உலகம் 18 வயதுடைய அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவை : வெளிநாடொன்றில் இன்று வெளியானது உத்தரவு

18 வயதுடைய அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவை : வெளிநாடொன்றில் இன்று வெளியானது உத்தரவு

0

கம்போடியாவில்(cambodia) 18 வயது நிரம்பிய அனைவரும் இராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம் என்ற சட்டம் அடுத்தாண்டுமுதல் நடைமுறையாகவுள்ளது.

இந்த உத்தரவை கம்போடிய அரசு இன்று திங்கட்கிழமை(ஜூலை 14) பிறப்பித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு காரணங்களைக் கருதி எடுக்கப்பட்டுள்ளதொரு முக்கிய நடவடிக்கை இது என தெரிவிக்கப்படகிறது.இதன்படி 18 – 30 வயது வரையுள்ள மக்கள் 18 மாதங்கள் இராணுவத்தில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும்.

கம்போடியா -தாய்லாந்து முறுகல் நிலை

  கம்போடியாவுக்கும் அதன் அண்டை நாடான தாய்லாந்துக்கும்(thailand) இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இருநாட்டு எல்லையில் அண்மையில் நிகழ்ந்த சண்டையில் கம்போடிய இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, நாட்டின் பாதுகாப்பு காரணங்களைக் கருதி எடுக்கப்பட்டுள்ளதொரு முக்கிய நடவடிக்கையாக இந்த புதிய உத்தரவு பார்க்கப்படுகிறது.

அதன்படி, கடந்த 2006-ஆம் ஆண்டில் கம்போடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ’கட்டாய இராணுவப் பணி சட்டம்’ 2026முதல் நடைமுறையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/8DnzwzozAyI

NO COMMENTS

Exit mobile version