Home உலகம் கனடாவில் டிஜிட்டல் துறையில் பாரிய புரட்சி: நியமிக்கப்பட்ட AI அமைச்சர்

கனடாவில் டிஜிட்டல் துறையில் பாரிய புரட்சி: நியமிக்கப்பட்ட AI அமைச்சர்

0

கனடாவின் (Canada) பிரபல ஊடகவியலாளரும் தொழில்நுட்ப வல்லுநருமான எவன் சாலமன் (Evan Solomon), நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் நவீனத்துவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடா தனது வரலாற்றில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் புதுமை அமைச்சராக ஈவன் சாலமனை நியமித்துள்ளது.

ஒட்டாவாவில் உள்ள ரிடோ ஹாலில் நடைபெற்ற சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் விழாவில், ரொறன்ரோ சென்டர் தொகுதியைச் சேர்ந்த புதிய நாடாளுமன்ற உறுப்பினரான சாலமன் பதவியேற்றுள்ளார்.

டிஜிட்டல் புரட்சி

டிஜிட்டல் புரட்சியை வரவேற்கும் வகையில், கனடா அரசு முக்கியமான ஒரு புதிய பொறுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய அமைச்சு நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கி, நாடு முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சியை ஊக்குவிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவை (AI) நிர்வகிப்பதும், அதன் சட்ட மற்றும் சமூக தாக்கங்களை கவனிப்பதும் இந்த அமைச்சின் முக்கிய பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நாடு

சமீப காலமாகவே கனடா, உலகின் முன்னணி டிஜிட்டல் பொருளாதார நாடுகளுள் ஒன்றாக மாற பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்தநிலையில்,இந்த அமைச்சின் உருவாக்கம் இதற்கான ஒரு தீர்வான வழியைத் திறக்கிறது எனக் கருதப்படுகின்றது.

கனடாவின் இந்த தீர்மானம், உலக நாடுகளுக்கே முன்மாதிரியாக இருக்கக்கூடும் என தொழில்நுட்பத்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version