கனடாவில் (Canada) வெளிநாட்டு தொழிலாளர்கள் (skilled foreign workers) நாடுகடத்தப்படும் அபாயத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் (Temporary Foreign Worker – TFW) திட்டத்தில் ஏற்பட்ட கடுமையான மாற்றங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாசு கட்டுப்பாட்டு உபகரணங்களை தயாரிக்கும் கனடாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஏழு வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலை அனுமதிகள் (Work Permit) விரைவில் காலாவதியாக உள்ளதால், ஒட்டாவா அரசிடம் புதிய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்துள்ளது.
தற்காலிக தொழிலாளர்
இந்தநிலையில், 2024 நவம்பர் மாதம் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள், தற்காலிக தொழிலாளர் வேலை அனுமதிகளைப் பெற மிகவும் கடினமாக்கி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக உயர் ஊதிய வேலை வாய்ப்புகளுக்கான ஊதியம் அளவுகோல்கள், சராசரி ஊதியத்தைவிட 20% அதிகமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மாகாணம் அல்லது பிரதேசத்தைப் பொறுத்து மணிக்கு ஐந்து டொலர் முதல் எட்டு டொலர் வரை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு
அத்தோடு, 2024 செப்டம்பர் 26 முதல், ஒரு நிறுவனத்தில் TFW திட்டம் வாயிலாக பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை, மொத்த ஊழியர்களில் பத்து சதவீதத்திற்கும் மேல் இருக்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் சுமார் 34,000 வேலை வாய்ப்புகளை உயர் ஊதியப் பிரிவிலிருந்து குறைந்த ஊதியப் பிரிவுக்கு மாற்றக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.
இதனால் நிறுவனங்கள் கூடுதல் ஊதியம் வழங்க முடியாமல், தங்களின் திறமையான ஊழியர்களை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள், கனடாவை வேலைவாய்ப்புக்கான பிரபலமான நாடாக இருக்க தடையாக அமைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
