Home உலகம் கனடாவிலுள்ள சிறை ஒன்றில் இருந்து கைதிகள் அவசரமாக வெளியேற்றம்: வெளியானது காரணம்

கனடாவிலுள்ள சிறை ஒன்றில் இருந்து கைதிகள் அவசரமாக வெளியேற்றம்: வெளியானது காரணம்

0

கனடா (Canada) கியூபெக்கில்(Quebec) உள்ள சிறையிலிருந்து 225 கைதிகளை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கியூபெக் பகுதியில் காட்டுத்தீ வியாபித்துவரும் நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வெளியேற்றப்பட்ட கைதிகள் அனைவரும் விளக்கமேதும் அளிக்கப்படாமல் இன்னொரு பாதுகாப்பு சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகள் வெளியேற்றம்

ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் குற்றவாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே, 225 கைதிகளை வேறு சிறைக்கு மாற்றியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

கனடா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ சம்பவமானது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இதுவரை மிகக் குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

2023ல் காட்டுத்தீயால் அழிந்த நிலப்பரப்பில் அளவு 15 மில்லியன் ஹெக்டேர் என்றே கூறப்படுகிறது.

இருப்பினும், சராசரியை விட மற்றொரு வெப்பமான கோடை காலம் எதிர்பார்க்கலாம் என்று பெடரல் அரசாங்கம் கணித்துள்ளது.

இதனிடையே, தற்போது நெருக்கடியான சூழல் நீடிப்பதாகவும்,
கியூபெக்கில் எப்போது அதிகபட்ச பாதுகாப்பு சிறையை திறக்க முடியும் என்பது தொடர்பில் ஆலோசனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version