Home உலகம் கனடாவின் முக்கிய நகரம் ஒன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவின் முக்கிய நகரம் ஒன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

கனடாவின் (Canada) ரொறன்ரோவைச் சேர்ந்த மக்களுக்கு பயண அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

பிரதேசத்தில் ஏற்படக்கூடிய கடுமையான பனிப்பொழிவு நிலைமைகள் காரணமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் பனிப்பொழிவு

தாழமுக்க நிலைமையினால் கூடுதல் அளவில் பனிப்பொழிவு ஏற்படக் கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக வீதிப் போக்குவரத்து மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படக்கூடும் எனவும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணம் செய்ய வேண்டும் எனவும், பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்வது பொருத்தமானது எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version