ஆறாயிரம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்திற்கு விண்ணப்பிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளது.
கனடா அரசு, Canadian Experience Class Express Entry திட்டத்தின் கீழ் சமீபத்திய டிரா (Draw No. 384) மூலம் 6,000 வெளிநாட்டு திறமையான தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்திற்கான விண்ணப்ப அழைப்புகளை (ITA) வழங்கியுள்ளது.
இந்த டிரா டிசம்பர் பத்தாம் திகதி 2025 அன்று இடம்பெற்றுள்ளது.
திறமையான வேலை
இதில், குறைந்தபட்ச CRS (Comprehensive Ranking System) மதிப்பெண் 520 பெற்றவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை 100,000-க்கும் மேற்பட்ட ITA-களை கனடா வழங்கியுள்ளது.
Canadian Experience Class (CEC) திட்டம், கனடாவில் ஏற்கனவே வேலை அனுபவம் பெற்றுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஒரு வருடம் சம்பளத்துடன் கூடிய திறமையான வேலை அனுபவம் கடந்த மூன்று ஆண்டுகளில் இருக்க வேண்டும்.
அத்தோடு, அந்த வேலை அனுபவம் தற்காலிக குடியிருப்பு அனுமதியுடன் கனடாவில் பெற்றிருக்க வேண்டும்.
தன்னார்வ வேலைகள்
தன்னார்வ வேலைகள் (Volunteering) அல்லது சம்பளம் இல்லாத இன்டர்ன்ஷிப் அனுபவங்கள் இதில் கணக்கில் கொள்ளப்படாது.
இந்த ஆண்டு டிசம்பர் பத்தாம் திகதி வரை, 30,850 ITA-கள் கனடாவில் வேலை அனுபவம் கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
IRCC ஒவ்வொரு இரண்டு வாரங்களிலும் டிரா நடத்தி, அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நிரந்தர குடியுரிமை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கின்றது.
இந்த நடவடிக்கை, கனடா தனது திறமையான தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகின்றது.
குறிப்பாக, மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் திறமையானவர்கள் இந்த திட்டத்தின் மூலம் கனடாவில் நிரந்தரமாக குடியேற வாய்ப்பு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
