Home உலகம் ஈரானிய இராணுவ படையொன்றை பயங்கரவாத குழுவாக அறிவித்த கனடா: வெளியான பின்னணி

ஈரானிய இராணுவ படையொன்றை பயங்கரவாத குழுவாக அறிவித்த கனடா: வெளியான பின்னணி

0

ஈரானின் (Iran) மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்க கனடா தீர்மானித்துள்ளது.

கனேடிய (Canada) எதிர்க்கட்சியின் மற்றும் ஈரானிய புலம்பெயர்ந்தோர் அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், கனேடிய பிரஜைகள் மற்றும் இராஜதந்திரிகளை ஈரானில் இருந்து விலக்கிக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா செல்ல தடை

இதனால் ஈரானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஈரானிய புரட்சிப் படையின் உயர்மட்ட அதிகாரிகள் கனடாவுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய புரட்சிகர இராணுவமானது, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பெரிதும் தலையிடுவதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version