Home உலகம் புலம்பெயர்தல் தொடர்பில் கனடா முன்வைத்துள்ள சட்டமூலம்

புலம்பெயர்தல் தொடர்பில் கனடா முன்வைத்துள்ள சட்டமூலம்

0

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த சட்டம் ஒன்றைக் கொண்டுவர கனடா அரசு திட்டமிட்டுவருகிறது.

சில புகலிடக் கோரிக்கைகளை கட்டுப்படுத்துதல் மற்றும், புலம்பெயர்தல் பரிசீலிப்பதை நிறுத்த அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல் தொடர்பிலான ஒரு சட்டமூலத்தை கனடா அரசாங்கம் முன்வைத்துள்ளது. 

கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரான லீனா (Lena Diab) டயப் கூறும்போது, ’வலிமையான எல்லைகள்’ சட்டமானது, திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் குற்றங்களையும், சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் நாட்டுக்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதையும், நாட்டின் புலம்பெயர்தல் அமைப்பின் ஒருமைப்பாட்டை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

புகலிட கோரிக்கை

இந்த சட்டத்தின் மூலம், அமெரிக்காவுடனான கனடாவின் பகிரப்பட்ட எல்லையைக் கண்காணிக்க காவல்துறையினருக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட உள்ளது.

இன்னொரு முக்கிய விடயம், இந்தச் சட்டம், கனடாவில் ஒரு வருடத்திற்கு மேலாக தங்கியிருப்பவர்கள் புகலிடம் கோருவதைத் தடுக்கக்கூடும்.

அதாவது, கனடாவுக்கு வந்தவர்கள், 14 நாட்களுக்குள் புகலிடம் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

அப்படி விண்ணப்பிக்காமல், ஒரு வருடத்துக்கும் மேல் கனடாவில் தங்கியிருப்பவர்கள், அதற்குப்பின் புகலிடம் கோர தடை விதிக்கப்படுவதுடன், அவர்கள் நாடுகடத்தப்படவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version