Home உலகம் சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பு : கனடா பிரதமர் மகிழ்ச்சி

சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பு : கனடா பிரதமர் மகிழ்ச்சி

0

சிரிய(syria) ஜனாதிபதி பஸார் அல் ஆசாத்(Bashar al-Assad) பதவி கவிழ்க்கப்பட்டதற்கு, கனடிய(canada) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (justin trudeau)தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

நீண்ட காலமாக அடக்கு முறையில் ஆட்சி செய்து வந்த அல் அசாட்டின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை குறித்து  தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் ஓர் பதிவினை இட்டுள்ளார்.

சிரிய நாட்டு மக்கள் புதிய சகாப்தத்தை ஆரம்பிக்க சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உன்னிப்பாக அவதானிக்கும் கனடா

சிரியாவில் ஆட்சி மாற்றம் குறித்து உன்னிப்பாக கனடா அவதானித்து வருவதாகவும் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை சிரியாவிலிருந்து தப்பிஓடிய பசார் அல் அசாத்திற்கு ரஷ்யா அடைக்கலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version