Home உலகம் டொனால்ட் ட்ரம்பிற்கு விழப்போகும் பேரிடி : பகிரங்க எச்சரிக்கை விடுத்த கனடா

டொனால்ட் ட்ரம்பிற்கு விழப்போகும் பேரிடி : பகிரங்க எச்சரிக்கை விடுத்த கனடா

0

கனடா (Canada) மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ அல்லது கனடாவை அமெரிக்காவின் (United States) 51ஆவது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடா மீது டிரம்ப் (Donald Trump) இன்றைய தினம் இன்று(01.02.2025) 20% வரியை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்றும் கனடா  தெரிவித்துள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கனேடிய அரசு

அமெரிக்காவின் எரிபொருளை நம்பி நாங்கள் இல்லை. கனடாவின் எரிபொருளை நம்பித்தான் அமெரிக்கா இருக்கிறது என கனேடிய அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இருக்க அமெரிக்கா எங்கள் மீது கூடுதல் வரியை விதிப்பது சரியாக இருக்காது. அப்படி விதிக்கும் பட்சத்தில் கனடாவின் எரிபொருளை அமெரிக்கா வாங்க முடியாது .மாறாக ரஷ்யாவிடம் எரிபொருள் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம். என்று கனடா அமெரிக்காவை எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் கனடா மீது 25% வரி விதிக்கும் பட்சத்தில் நாங்கள் அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்க மாட்டோம் என்றும்  கனடா அறிவித்து உள்ளது.

இதேவேளை ஒவ்வொரு வருடமும் கனடா அமெரிக்காவிற்கு கணிசமான அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version