Home உலகம் கனடாவில் இடம்பெற்ற அசாதாரண நிகழ்வு: துருவக் கரடிகள் தாக்கி ஒருவர் பலி!

கனடாவில் இடம்பெற்ற அசாதாரண நிகழ்வு: துருவக் கரடிகள் தாக்கி ஒருவர் பலி!

0

கனடாவில்(Canada) கனேடியர் ஒருவர் துருவக்கரடிகளால் கொல்லப்பட்டுள்ள அசாதாரண நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

கனடா ப்ரெவர்ட்(Brevoort) தீவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த தீவில் நாட்டுக்குள் ஏதாவது ஏவுகணைகளோ, விமானங்களோ அத்துமீறி நுழைகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்காக பாதுகாப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

துருவக் கரடிகள்

அங்கு பணியாற்றும் ஒரு ஊழியரைத்தான் இரண்டு துருவக்கரடிகள் கொன்றுள்ளன.

விடயமறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மற்ற ஊழியர்கள், அந்தக் கரடிகளில் ஒன்றைக் கொன்றுள்ளார்கள்.

துருவக்கரடிகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை.

எனினும், 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்படி மனிதர்கள் மீது துருவக்கரடிகள் தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும் என கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டு, அலாஸ்காவிலுள்ள ஒரு கிராமத்தில், ஒரு பெண்ணையும் அவரது ஒரு வயதுடைய மகனையும் ஒரு துருவக்கரடி கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version