Home உலகம் கனடாவில் தொடரும் சீரற்ற காலநிலை : பாடசலைகளுக்கு திடீர் விடுமுறை

கனடாவில் தொடரும் சீரற்ற காலநிலை : பாடசலைகளுக்கு திடீர் விடுமுறை

0

பனிப்புயல் காரணமாக கனடாவில் ரொறன்ரோ பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், ரொறன்ரோ பெரும்பாலான பகுதியின் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் என்பன மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைகள் ரத்து 

இந்தநிலையில், ரொறன்ரோ, பீல், ஹால்டன், யோர்க், டர்ஹம், ஹமில்டன் நயகரா, மோன் அவனியர், மற்றும் சிம்கோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பல்கலைக்கழகங்களும் மூடப்படுவதாகவும் பாடசாலை போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version