Home உலகம் அமெரிக்காவிலிருந்து கனடா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அமெரிக்காவிலிருந்து கனடா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

70% கனடா சுற்றுலாப் பயணிகள் இந்த வருடம் அமெரிக்காவுக்குச் (USA) செல்ல விரும்பவில்லை என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அத்துடன் மார்ச் மாதத்தில் அமெரிக்க எல்லை வழியாக காரில் பயணிக்கும் கனடா (Canada) சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 32 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி சர்ச்சைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவை காரணமாக அமெரிக்கா நோக்கி பயணிப்பதைத் கனடா மக்கள் தவிர்த்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடா சுற்றுலாப் பயணிகள்

இந்த சூழ்நிலையில், கோடை காலத்தில் கனடா சுற்றுலாப் பயணிகளை மாநிலத்திற்கு வருமாறு அமெரிக்காவின் கலிபோர்னியா (california) மாநில ஆளுநர் கேவின் நியூசம் அழைப்பு விடுத்துள்ளார்.

கலிபோர்னியா கெலிவாஷிங்டனில் இருந்து 2000 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.

ஹாலிவுட் சின்னம், ‘வாக் ஆஃப் ஃபேம்’, கடற்கரைப் புல்வெளிகள், திராட்சைத்தோட்டங்கள் என பல ஆண்டுகளாகவே கனடாப் பயணிகளின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக கலிபோர்னியா இருந்துள்ளது.

புதிய சர்வதேச சுற்றுலா பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள ஆளுநர் கேவின் கானடா மக்களிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்  

எனினும், கனடாவை “51வது மாநிலம்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டதும், கனடா மீது விதித்த புதிய வரிகள் விதிக்கப்பட்டமையும் கனடிய சுற்றுலாப் பயணிகள் வீழ்ச்சிக்கான காரணமாக கருதப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version