Home உலகம் கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட இந்திய வம்சாவளியினருக்கு அனுமதி மறுத்த ட்ரூடோ கட்சி

கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட இந்திய வம்சாவளியினருக்கு அனுமதி மறுத்த ட்ரூடோ கட்சி

0

கனடாவின் பிரதமர் பதவிக்கு போட்டியிட, தனக்கு ஜஸ்டின் ட்ரூடோவின் லேபர் கட்சி அனுமதி மறுத்துவிட்டதாக இந்திய வம்சாவளியினரான நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள செய்தி மக்கள் மத்தியில் பேசுப்பொருளாகியுள்ளது.

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை பதவி விலகல் செய்ததைத் தொடர்ந்து, தான் கனடா பிரதமர் பதவிக்காக போட்டியிட இருப்பதாக இந்திய வம்சாவளியினரான சந்திரா ஆர்யா தெரிவித்திருந்தார்.

2015ஆம் ஆண்டு முதல் கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆர்யா, இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

கனடா பிரதமர்

இந்நிலையில், திடீரென ஆர்யா சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்று மக்களை கோபமடையச் செய்துள்ளது.

குறித்த பதிவில் ஜஸ்டின் ட்ரூடோவின் லேபர் கட்சி, கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட, தனக்கு அனுமதி மறுத்துவிட்டதாக ஆர்யா தெரிவித்துள்ளார்.

எதனால் ஆர்யாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், ஆர்யாவை போட்டியிட விடாமல் தடுப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என கனேடிய மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

NO COMMENTS

Exit mobile version