பாப்பரசர் பிரான்சிஸ்(pope fransis) மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசர் யார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு விடை காணும் முயற்சியில் வத்திக்கான்(vatican) இறங்கி இருக்கிறது.
அதன்படி கர்தினால் எனப்படும் கர்தினால்கள் கூட்டம் இது குறித்து ஆலோசனை நடத்தினர். அதன்படி புதிய பாப்பரசரை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் கான்கிளேவை (மாநாடு) எதிர்வரும் 7-ம் திகதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அடுத்த பாப்பரசருக்கான போட்டி
இந்த சூழலில் அடுத்த பாப்பரசருக்கான போட்டியில், ஹங்கேரியை சேர்ந்த கர்தினால் பீட்டர் எர்டோ (72), பிலிப்பைன்ஸை சேர்ந்த கர்தினால் லூயிஸ் அன்டோனியோ டாக்லே (67), ஆபிரிக்காவின் கானாவை சேர்ந்த கர்தினால் பீட்டர் டர்க்சன்(76), இத்தாலியைச் சேர்ந்த கர்தினால் பியட்ரோ பரோலின்(70) ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னிலை வகிக்கும் கர்தினால்
இவர்களில் கர்தினால் பியட்ரோ பரோலின் அடுத்த பாப்பரசர்ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. பியட்ரோ பரோலினுக்கு 41 சதவீத ஆதரவு இருப்பதாகவும், அடுத்ததாக லூயிஸ் அன்டோனியோ டாக்லே-க்கு 29 சதவீத ஆதாரவும் இருப்பதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.
