Home இலங்கை அரசியல் பிரதமர் ஹரிணிக்கு எதிராக வழக்கு

பிரதமர் ஹரிணிக்கு எதிராக வழக்கு

0

நாடாளுமன்றத்தில் பூந்தொட்டி ஒன்றை மிதித்தமைக்காக தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(08.03.2025) உரையாற்றும் போது கடந்த வருடம் மகளிர் தினத்தன்று இடப்பெற்ற சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

கடந்த வருடம் மகளிர் தினத்தன்று பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இங்குள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இன்னும் விசாரணையில் வழக்கு

அதன்போது, அவர்கள் மீது தண்ணீர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து, நாடாளுமன்றத்திற்கு வந்தபோது ஒரு பூந்தொட்டியை மிதித்தமைக்காக தன் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை ஹரிணி நினைவுகூர்ந்தார்.

வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version