Home இலங்கை அரசியல் திருகோணமலையில் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

திருகோணமலையில் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

0

Courtesy: H A Roshan

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரவாளர்கள் திருகோணமலை (Trincomalee) மாவட்ட பிரதான காரியாலயத்துக்கு முன்னால் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிண்ணியாவில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (15) இந்த கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Mahroof) ஆதரவாளர்களே இவ்வாறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சஜித்துக்கு ஆதரவு

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தங்கள் ஆதரவை அப்பகுதி மக்கள் தெரிவித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/celebration-of-sajith-premadasa-supporters-1723742717

NO COMMENTS

Exit mobile version