பிரித்தானிய அரசாங்கம் (UK government ) இன்று முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
அதன்படி, திறன் வாய்ந்த வேலை தேடுபவர்கள் (Skilled Workers) குறைந்தபட்ச ஆண்டு வருமான வரம்பு £38,700 இலிருந்து £41,700 ஆக உயர்த்தப்படுகிறது.
பணியாற்ற முடியாத நிலை
இந்த வரம்பு உயர்வின் விளைவாக, 111 வகையான வேலைகளை செய்யும் வெளிநாட்டவர்கள் இனி பிரித்தானியாவில் பணியாற்ற முடியாத நிலை உருவாகும்.
இதனால் நோயாளிகள், ஊனமுற்றோரை கவனித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் பணியாளர்களுக்கான விசா நிறுத்தப்படவுள்ளது.
அத்துடன் வெளிநாட்டு மாணவர் சேர்க்கையில் பல்கலைக்கழகங்களும் கடுமையான விதிகளை எதிர்கொள்ள நேரிடும்.
பட்டப்படிப்புக்கு பிந்தைய முதுநிலை படிப்புகளுக்கான காலம் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆங்கில மொழித் தகுதி
பிரித்தானியாவில் பணி விசா வைத்திருப்பவர் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆண்டு இறுதிக்குள் ஆங்கில மொழித் தகுதியை கடுமையாக்க உள்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் வெளிநாட்டு பணியாளர் நிரந்தர குடியுரிமைக்கான கால அவகாசத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீடிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கைகள், நாட்டு உள்நாட்டு வேலை வாய்ப்புகளை பாதுகாக்கவும், மக்கள் வரப்போக்கை கட்டுப்படுத்தவும் பிரித்தானிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
