ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் சீனா மீண்டும் தடை செய்யும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்து வருவதால் இந் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
பசுபிக் கடலில் விடப்பட்டு வரும் புக்குஷிமா அணு நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட நீரை மேலும் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சீனா ஜப்பானுக்கு அறிவித்துள்ளது.
கடல் உணவு
இதனையடுத்து, சீனாவால் ஜப்பான் கடல் உணவுகளுக்கு மீண்டும் இறக்குமதி தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்தத் தடை நடைமுறைக்கு வரும் நேரம், பீஜிங்–டோக்கியோ இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
