Home உலகம் உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய நாடு எது தெரியுமா? (காணொளி)

உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய நாடு எது தெரியுமா? (காணொளி)

0

ஆசியாவில் பெரியநாடான சீனா (China), உலகின் மிக உயரமான பாலத்தை கட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இது ஒரு பெரிய பள்ளத்தாக்கின் குறுக்கே இரண்டு மைல்கள் நீளமுள்ள கட்டமைப்பாகும்.

Huajiang grand canyon எனும் இந்த பாலத்தை 216 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.2,200 கோடி) செலவில் இந்த பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. 

உலகின் மிக உயரமான பாலம்

இப்பாலத்தின் எஃகு ட்ரஸ்கள் சுமார் 22,000 மெட்ரிக் டன் எடை கொண்டவை. ஒரு பெரிய பள்ளத்தாக்கின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் நீளம் இரண்டு மைல்கள் என்பதால், இப்பள்ளத்தாக்கை விரைவாக கடந்து விடலாம். 

இந்த பாலத்தின் எஃகு ட்ரஸ்கள் மூன்று ஈபிள் கோபுரங்களுக்கு சமமான எடை கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா முக்கிய சுற்றுலா தலமாக அமைக்கப்பட வருகிற ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. 

ஈபிள் கோபுரத்தை விட 200 மீற்றருக்கு மேல் உயரம் கொண்ட இந்தப் பாலம் ஒரு குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை சாதனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

https://www.youtube.com/embed/rwXYj1NalIw

NO COMMENTS

Exit mobile version