Home உலகம் ஈரான் மீதான அமெரிக்காவின் குறி: சீனா விடுத்த அதிரடி எச்சரிக்கை

ஈரான் மீதான அமெரிக்காவின் குறி: சீனா விடுத்த அதிரடி எச்சரிக்கை

0

ஈரான் (Iran) மீது பலத்தை பிரயோகிப்பது தொடர்பில் அமெரிக்காவை (United States) சீனா (China) எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், அமெரிக்கா பலத்தைப் பிரயோகிப்பது, ஈரானுடைய இறையாண்மையையும் பாதுகாப்பையும் மீறுவதாக கருதப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறையாண்மை

மற்ற நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் எந்த நடவடிக்கையையும் சீனா எதிர்க்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சர்வதேச உறவுகளில் பலத்தை பிரயோகிப்பது அல்லது அது தொடர்பில் அச்சுறுத்துவதையும் சீனா எதிர்க்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஈரானைத் தாக்குவது தொடர்பில் ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ள நிலையில், தற்போது சீனாவும் அமெரிக்காவை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version