Home உலகம் அதிரடி அறிவிப்பு..! விசா இல்லாமல் நுழைய 76 நாடுகளுக்கு அனுமதி வழங்கிய நாடு

அதிரடி அறிவிப்பு..! விசா இல்லாமல் நுழைய 76 நாடுகளுக்கு அனுமதி வழங்கிய நாடு

0

சீனா (China) தனது விசா கொள்கையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தளா்த்தியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

சீனாவின் சுற்றுலாத் துறை, பொருளாதாரம், மென் வலிமையை (சாஃப்ட் பவா்) மேம்படுத்தும் நோக்கில் சீன அரசு படிப்படியாக விசா இல்லா நுழைவை அறிமுகம் செய்துள்ளது.

விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்குள் சுற்றுலா வரலாம் என்பதற்கான பட்டியலில் அந்த நாடு விரிவுபடுத்திள்ளது.

வெளிநாட்டு பயணிகள் விசா

அதன்படி, தற்போது 74 நாடுகளைச் சோ்ந்த குடிமக்கள் 30 நாட்கள் வரை விசா இன்றி சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடியும்.

தேசிய குடிவரவு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024-ஆம் ஆண்டில் 2 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் விசா இன்றி சீனாவுக்கு வந்தனா்.

இது, மொத்த பயணிகளில் மூன்றில் ஒரு பங்காகவும், முந்தைய ஆண்டை விட இரு மடங்காக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version