சீனாவில் (China) நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த நாட்டின் குவாங்டாங் மாகாணம் (Guangdong Province), மெய்ஷூ நகருக்கு (Meishu City) அருகே மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலையில் சுமாா் 18 மீற்றர் பரப்பு புதன்கிழமை (01) நொறுங்கி பள்ளத்தில் சரிந்தது.
இதில், வீதியில் சென்று கொண்டிருந்த சுமாா் 20 வாகனங்கள் சரிவில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நடுவானில் இயங்க மறுத்த இயந்திரம் :கடற்கரையில் திடீரென தரையிறங்கிய விமானம்
48 பேர் பலி
எனவே அந்த வாகனங்களில் இருந்த 24 போ் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியிருந்தனா்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளதாக நேற்று தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நெடுஞ்சாலை திடீரென உடைந்து நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் பழைய வீடு வாங்கிய தம்பதிக்கு அடித்த அதிஷ்டம் : சமையலறையில் கிடைத்த புதையல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…. |