Home உலகம் அமெரிக்காவிற்கு சீனா தக்க பதிலடி

அமெரிக்காவிற்கு சீனா தக்க பதிலடி

0

சீன இறக்குமதி பொருள்கள் மீது மேலதிகமாக 10 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) உத்தரவிட்ட நிலையில் சீனாவும் பதிலடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதாக தெரிவித்து ஜனாதிபதி ட்ரம்ப் நாடுகளுக்கு எதிராக வரி விதிப்பை மேற்கொள்வதாக கூறியுள்ளார்.

சீனாவின் பதிலடி

சீனா(china) மீது அமெரிக்க (us)அரசு மேலதிக வரி விதிப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், அதற்கு பதிலடியாக சீன அரசும் வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இன்று(பெப். 4) எடுத்துள்ளது.

வரி விதிக்கப்பட்ட பொருட்கள்

அதன்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, இயற்கை எரிவாயு பொருள்கள் மீது 15 சதவிகிதம் வரியும், கச்சா எண்ணெய், வேளாண் உபகரணங்கள், குறிப்பிட்ட ரக கார்கள் உள்பட இன்னும் சில பொருள்கள் மீது 10 சதவிகிதமும் கூடுதல் வரி விதிக்க முடிவெடுத்துள்ளதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கண்ட வரி விதிப்பு நடவடிக்கையை பெப். 10-ஆம் திகதி முதல் நடைமுறைப்படத்த திட்டமிடப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version