Home உலகம் சீனா அறிமுகப்படுத்தியுள்ள புதிய விசா திட்டம்

சீனா அறிமுகப்படுத்தியுள்ள புதிய விசா திட்டம்

0

சீனா புதிதாக சிறப்பு ஆசியான் விசாவை (ASEAN Visa) அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் உள்ள உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் குறித்த விசா திட்டத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசா திட்டம் வணிகர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு சுற்றுலா

புருனை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் தீமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்ட உள்நாட்டு சுற்றுலா மற்றும் வர்த்தக பயணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க சீனா எடுத்திருக்கும் முக்கியமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இது பகுதி ஒருங்கிணைப்பு மற்றும் நட்புறவுக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் நடவடிக்கையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version