சீனாவில் இடம்பெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டிற்கு சென்றிருந்த இந்திய பிரதமர் தொடர்பான தகவல்களும் புகைப்படங்களும் அந்நாட்டின் சமூக ஊடகங்களில் முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற அமெரிக்கா மற்றும் பல்வேறு நாட்டின் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள வெய்போ என்ற சமூக வலைதளங்களில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றதால் இந்த ஆண்டு ஷாங்காய் உச்சி மாநாடு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
ஐரோப்பிய ஊடகங்கள்
குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள் பிரதமர் மோடி பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன.
இந்த நிலையில் சீனாவின் வெய்போ சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி புடின் , சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஒன்றாக கலந்துரையாடிய புகைப்படம் மற்றும் காணொளிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
