Home உலகம் தங்கப்பாத்திரத்தில் சமைத்து சாப்பிடும் சீன பெண் : வைரலாகும் காணொளி

தங்கப்பாத்திரத்தில் சமைத்து சாப்பிடும் சீன பெண் : வைரலாகும் காணொளி

0

சீனப்(china) பெண் ஒருவர் தங்கப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடும் காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.

ஷென்சென் எனப்படும் அந்த இளம்பெண் 2 தங்க நகைக் கடைகளை நடத்தி வருகிறார். அவர் தனது நண்பரின் பட்டறையில் 1 கிலோ தங்கத்தில், தங்கப் பாத்திரத்தை செய்யச் சொல்லி வாங்கினார்.

அதில் தனக்குப் பிடித்தமான உணவை சமைத்து சாப்பிட்டு காணொளி வெளியிட்டு உள்ளார்.

காணொளியில் அவர் வெளியிட்ட பதிவு

அந்தக் காணொளியில் “இந்த தங்கப்பாத்திரம் விற்பனைக்குத்தான் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதனால் வாடிக்கையாளர்களிடம் அனுமதி கேட்டுத்தான் அதில் சமைத்து சாப்பிட்டு காட்சிப்படுத்தி உள்ளேன்.

தங்கம் அதன் சிறந்த கடத்து திறனால், உணவை விரைவில் சமைக்க உதவுகிறது. ஆனால் உணவின் சுவையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை” என்று கூறி உள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version