Home முக்கியச் செய்திகள் கொழும்பில் இருந்து யாழ் வந்த அதிசொகுசு பேருந்து கோர விபத்து – ஐவர் படுகாயம்!

கொழும்பில் இருந்து யாழ் வந்த அதிசொகுசு பேருந்து கோர விபத்து – ஐவர் படுகாயம்!

0

கொழும்பிலிருந்து (Colombo) பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து ஒன்று, லாண்ட்
மாஸ்டர் வாகனத்தை மோதித்தள்ளியதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் யாழ். தென்மராட்சி, மிருசுவில் யூ9 வீதியில் இன்று(18) அதிகாலை
4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

அவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளனர்.

பேருந்தும் உழவு இயந்திரமும் மோதி விபத்து ஏற்பட்டதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் – பிரதீபன் மற்றும் கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version