அரச உர நிறுவனங்களான லங்கா உரக் கம்பனி மற்றும் வர்த்தக உரக் கம்பனி ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஊழியர்களில் 278 பேர் இன்று (18) முதல் கட்டாய ஓய்வு பெற்றுள்ளனர்.
குறித்த தகவலை விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ளது.
மேற்படி, இரண்டு உர நிறுவனங்களும் இனி ஒரு நிறுவனமாக ஒரு தலைவர் மற்றும் ஒரு இயக்குநர் குழுவின் கீழ் செயல்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
மேலும், ஓய்வுபெற்ற 278 ஊழியர்களுக்கும் 8 இலட்சம் ரூபா தொடக்கம் 90 இலட்சம் ரூபா வரையான ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வு கிரிபத்கொடையில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தலைமையில் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, இந்த கட்டாய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.