Home இலங்கை அரசியல் சுமந்திரன் இடையேயான விரிசலின் பின்னணியை முதன் முறையாக அம்பலப்படுத்தும் சிறீதரன்

சுமந்திரன் இடையேயான விரிசலின் பின்னணியை முதன் முறையாக அம்பலப்படுத்தும் சிறீதரன்

0

சுமந்திரனுடைய(M.A.Sumanthiran)
கடிதம் கிடைத்த போதே எனக்கு தெரியும் எனது தலைவர் பதவி நீதிமன்ற கட்டளைக்கு உட்படுத்தப்படப்போகின்றது என்று இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்(S.Sritharan) தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவின் பின்னர் சுமந்திரனிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு கிடைத்தது. அதற்கு நான் பதிலளிக்கவில்லை.

சிறீதரனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுமந்திரனின் முக்கிய முடிவு

அதில் யாப்பு மீறல்கள் குறித்தும் நீதி வாசகங்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதம் ஊடகங்களில் வெளிவந்த பின்னரே எனது மின்னஞ்சல் மற்றும் வாட்ஸஅப் செயலிக்கு கிடைத்தது.

அதில் எந்த எந்த விடயங்கள் எப்படி இருக்குமென்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வழக்கு தாக்கல் செய்யப்படும், நான் தலைவராக இயல்பாக இயங்க முடியாது என அந்த கடிதம் மூலம் ஊகித்துக்கொண்டேன்.

அதற்கு முன்னர் ஜனவரி 27 ஆம் திகதி நாங்கள் தெரிவுகளுக்கு சென்ற போது அவர் செயலாளர் பதவியை கேட்டதும் கூட என் மனதில் கீறல்களை ஏற்படுத்தியிருந்தது என கூறினார்.

பதவி விலகும் சிங்கப்பூர் பிரதமர் – எழுந்துள்ள குற்றச்சாட்டு

அநுரவின் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு

   

NO COMMENTS

Exit mobile version