Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு எதிர்வரும் 05ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க பயன்படுத்தும் டொயோட்டா லேண்ட் குரூசர் ரக வாகனம், கடந்த நவம்பர் 08ஆம் திகதி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது.

குறித்த வாகனம், சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸார் அறிக்கை

அது தொடர்பில் தற்போது கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பொலிஸார் அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.

அதன் பிரகாரம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐந்தாம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சுஜீவ சேனசிங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version