Home இலங்கை அரசியல் சம்பந்தனின் மறைவுக்கு பின் அவர் மீது எழுந்துள்ள விமர்சனம்

சம்பந்தனின் மறைவுக்கு பின் அவர் மீது எழுந்துள்ள விமர்சனம்

0

தற்போது முஸ்லிம்
கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் (R.Sampanthan) ஒன்றும் செய்யவில்லை என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

அம்பாறை (Ampara) மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய காங்கிரஸ்
கட்சியின் அலுவலகத்தில் இன்று (08.07.2024) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில்
கலந்து கொண்ட போதே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

மறைந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனுக்கு
முதலில் இரங்கல் தெரிவித்துக்கொள்கின்றோம்.எந்த மனிதன் மரணித்தாலும்
இரங்கல்களை நாங்கள் தெரிவிப்பது சம்பிரதாயம் ஆகும்.

ஆனால், தற்போது முஸ்லிம்
கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் ஒன்றும் செய்யவில்லை
என்பதை நாங்கள் தைரியத்துடன் கூற விரும்புகின்றோம். அதனால் தான் எங்கள் கட்சி
அவர் தொடர்பிலான எந்தபொரு அறிக்கையும் வெளியிடவில்லை” எனக் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

Source: https://tamilwin.com/article/criticism-of-sambandhan-after-his-death-1720427376

NO COMMENTS

Exit mobile version