கியூபாவில் (Cuba) கட்டாய வேலையில் ஊழியர்களை ஈடுபடுத்தியதாகச் சந்தேகிக்கப்பட்ட பிரேசில் அதிகாரிகளின் அமெரிக்க விசாவை ரத்துச்செய்திருப்பதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
பிரேசில் அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அமெரிக்கச் சுகாதார நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள், அவர்களுடைய குடும்பத்தினர் ஆகியோரது விசா ரத்துச் செய்யப்படுகிறது.
பிரேசிலின் மைஸ் மெடிகோஸ் (Mais Médicos) திட்டத்தின் வழி கியூபாவைச் சேர்ந்தோர் கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
