Home இலங்கை அரசியல் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் – விமான நிலையம் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் – விமான நிலையம் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் காவல்துறை ஊடக பிரிவு அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

ஊடக பிரிவு 

இதேவேளை வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு (Colombo Bandaranaike International Airport) வரும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்களை ஊரடங்கு வேளையில் பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கின்ற தரப்பினர் தங்களது நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தை அல்லது கடிதத்தை ஊரடங்கு கால பிரவேச ஆவணமாக பயன்படுத்த முடியும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே அன்றி வேறு எந்த காரணங்களுக்காகவும் இருக்காதென நம்புவதாக தேசிய மக்கள் சக்தி விசேட அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

வாக்குகளை என்னும் பணியில் எந்த தலையீடும் இருக்காத வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் செயற்படவேண்டும் என்பதுடன் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பென்றும் தேசிய மக்கள் சக்தி அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version