Home உலகம் கனடாவின் முக்கிய மாகாணம் ஒன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவின் முக்கிய மாகாணம் ஒன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

கனடாவின்  (Canada) ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று

குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தின் தென்பகுதியில் இன்றைய தினம் (27.01.2025) இவ்வாறு பலத்த காற்று வீசும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று பகல் முதல் இரவு வரையில் இவ்வாறு மணிக்கு 70 கிலோமீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மரங்கள் முறிந்து விழக்கூடும் அபாயம் காணப்படுவதால் மின்சாரம் தடைப்படும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version