Home உலகம் யாகி புயல் பாதிப்பு: மியான்மரில் பலி எண்ணிக்கை 226

யாகி புயல் பாதிப்பு: மியான்மரில் பலி எண்ணிக்கை 226

0

யாகி புயலினால் மியான்மரில் (Myanmar) ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 226 உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்சீனக் கடலில் (South China Sea) உருவான யாகி புயல் பிலிப்பைன்ஸ் (Philippines), தெற்கு சீனா (South China), வியட்நாம் (Vietnam), லாவோஸ் (Laos) மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது.

இந்தப் புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டது.

உயிரிழப்பு எண்ணிக்கை

இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 226 பேர் உயிரிழந்துள்ளதுடன் 77 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மர் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது என அறியமுடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாகி புயல் முன்னதாக வியட்நாம் (Vietnam), வடக்கு தாய்லாந்து (Northern Thailand) மற்றும் லாவோசைத் தாக்கியது.

இதில் வியட்நாமில் கிட்டத்தட்ட 300 பேரும், தாய்லாந்தில் 42 பேரும், லாவோசில் 4 பேரும் உயிரிழந்ததாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version