Home உலகம் பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம் நிலவி வருவதால் இரண்டு நாட்கள் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் மாணவர்களின் கற்றலுக்கான மாற்று ஏற்பாடாக இணையவழி கல்வியை மேற்கொள்ள அந்நாட்டு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிலிப்பைன்ஸின் தலைநகர் பகுதியில் அடுத்த மூன்று நாட்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை (98.6 டிகிரி பரனைட்) எட்டக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கனேடிய மாணவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்: வெளியாகியுள்ள தகவல்

மூடப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள்

மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு 45 டிகிரி செல்சியஸ் என்ற அபாயகரமான மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுவதுடன் இதன்காரணமாக வெப்ப பக்கவாதம் கூட ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மே மாதம் இரண்டாவது வாரம் வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பத்தினால் ஏற்பட்ட வரட்சியினால் ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் 13 மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிவர்களின் எண்ணிக்கை

மின்விசிறிகள் பயன்படுத்தப்படல்

அத்துடன் பிலிப்பைன்ஸின் பொருளாதார உற்பத்தியில் முக்கால்வாசி பங்கு வகிக்கும் லூசோனி தீவிற்கு மின்சாரத்தை விநியோகத்தில் வெப்ப அலை சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள விமான நிலையத்தில் நேற்றைய தினம் ஆறு குளிரூட்டும் கோபுரங்களில் இரண்டு நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு  உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலயைில் பயணிகளுக்காக மின்விசிறிகள் பயன்படுத்தப்படுவதாக விமான நிலைய ஆணையம்இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை: மீறினால் 15 ஆண்டு சிறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 

NO COMMENTS

Exit mobile version