Home உலகம் கனடாவில் வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கனடாவின் (Canada) தென்மேற்கு ஒன்றாரியோ (Ontario) பகுதியில் வெப்பநிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த பகுதியில் இன்றைய தினம் (17) முதல் ஆபத்தான வெப்பநிலை மற்றும் ஈரப்பதனுடன் கூடிய வெப்பநிலை நீடிக்கும் என கனேடிய தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடுமையான வெப்பநிலை

இந்த நிலையில், லண்டன் (London), ரொறன்ரோ (Toronto), நயகரா (Niagara Falls), ஓவன் சவுன்ட் மற்றும் கிங்ஸ்டன் (Kingston) ஆகிய பகுதிகளில் இவ்வாறு கடுமையான வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சராசரியாக 35 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிக்கும் எனவும், ஈரப்பதன் நிலைமையுடன் பார்க்கும் போது சுமார் 40 முதல் 45 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிப்பது போன்று உணர நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ரொறன்ரோவில் இன்று (17) இடிப்புயல் நிலைமை நீடிக்கக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version