Home உலகம் ட்ரம்பின் அமைச்சரவைக்கு வெடிகுண்டு மிரட்டல் : அமெரிக்காவில் பரபரப்பு

ட்ரம்பின் அமைச்சரவைக்கு வெடிகுண்டு மிரட்டல் : அமெரிக்காவில் பரபரப்பு

0

அமெரிக்க (us)ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின்(donald trump) புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் குழுவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.

முதல் அச்சுறுத்தல் 

முதல் அச்சுறுத்தல் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக பெயரிடப்பட்ட எலிஸ் ஸ்டெபானிக்கிற்கு விடுக்கப்பட்டது. அவர் தனது கணவர் மற்றும் மூன்று வயது குழந்தையுடன் வோஷிங்டனில் இருந்து நியூயோர்க்கிற்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவரது அலுவலகம் குறிப்பிட்டது.

டிரம்பின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லூஃபிக்கின் நியூயோர்க் வீட்டிற்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 ட்ரம்ப் விடுத்துள்ள சூளுரை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகத்தின் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட லீ செல்டிங்கிற்கும் அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயங்கப்போவதில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த செயலுக்கு பைடன்(biden) உள்ளிட்ட நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version