Home உலகம் மனிதநேயத்தை உலுக்கும் பேரவலம்! இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 15 பேர் பலி

மனிதநேயத்தை உலுக்கும் பேரவலம்! இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 15 பேர் பலி

0

மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள ஒரு சுகாதார மருத்துவமனையில் சிகிச்சை பெற வரிசையில் நின்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 15 பேரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மருத்துவ சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்களைப் பெற வரிசையில் நின்றபோதுஇவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட 15 பேரில் 9 குழந்தைகள் மற்றும் 5 பெண்கள் அடங்குவதாக ஊடக செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இஸ்ரேலிய இராணுவ தாக்குதல் 

இஸ்ரேலிய இராணுவ துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் 2 வயது குழந்மையும் அடங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

NO COMMENTS

Exit mobile version