Home உலகம் டெல்லி பயங்கரவாத தாக்குதல்: விசாரணைக் களத்தில் உள்நுழையும் அமெரிக்கா!

டெல்லி பயங்கரவாத தாக்குதல்: விசாரணைக் களத்தில் உள்நுழையும் அமெரிக்கா!

0

இந்திய தலைநகர் டெல்லியில் மேற்கொள்ளப்பட்டது, ஒரு தெளிவான பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்காவும் உதவியளிக்க தயாராக உள்ளதாகவும், அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இதனை சர்வதேச ஊடகங்கள் செய்தி உறுதிப்படுத்தியுள்ளன.

அவதானம் தேவை 

எனினும், இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இந்தியா மிக அவதானமாகவும் திறமையாகவும் விசாரணை நடத்தி வருவதாகவும் மார்கோ ரூபியோ சுட்டிக்காட்டியுள்ளார்.

டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10 ஆம் திகதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் ஒன்று வெடித்துச் சிதறியது.

இதன்போது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

[TSPNKLJ
]

NO COMMENTS

Exit mobile version