Home உலகம் ஈரானை அழிக்க ஒரு காரணமே போதும் : அச்சுறுத்துகிறது இஸ்ரேல்

ஈரானை அழிக்க ஒரு காரணமே போதும் : அச்சுறுத்துகிறது இஸ்ரேல்

0

இஸ்ரேல் லெபனானுக்கு ராணுவத்தை அனுப்பினால் அந்த நாட்டின் மீது தீவிரமான போரை முன்னெடுப்போம் என்று நேற்று(29) நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் ஈரான் எச்சரித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், இந்த ஒரு கருத்தே ஈரான் அரசை முழுவதுமாக அழித்தொழிக்க போதுமான காரணம் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் – ஹிஸ்புல்லா பிரச்சனை

ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோகாவ் காலண்ட் சுமுகமான முறையில் ஈரான் – ஹிஸ்புல்லா பிரச்சனையை தீர்க்க வழி தேடி வருவதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் 

 ஈரானின் பின்புலத்துடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. பலஸ்தீன லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நேற்று வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் ஜூலை 5 ஆம் திகதி இரண்டாம் கட்டமாக மீண்டும தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version