Home இலங்கை பொருளாதாரம் இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம்பெயர் தமிழர்களின் திடீர் முடிவு

இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம்பெயர் தமிழர்களின் திடீர் முடிவு

0

இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

இலங்கையை உலுக்கிய கோர விபத்து! காயமடைந்தவர்கள் குறித்து புதிய தகவல்

மேலும் கூறுகையில், இலங்கையிலிருந்து மிக பெரிய எண்ணிக்கையிலான தொழில்வாண்மையாளர்களும் கல்வி கற்றவர்களும் வெளியேறியுள்ளனர்.இப்போதும் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு வேறு நாடுகளுக்கு சென்றவர்கள் தமது குடும்பங்களுக்கு பணம் அனுப்பும் போது இலங்கையில் வெளிநாட்டு பணங்களின் புழக்கம் அதிகரிக்கும் நிலை தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணிலின் முடிவு

இலங்கையிலிருந்து மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் பரவாயில்லை வெளிநாட்டு பணம் அனுப்பினால் போதும் என்ற மனப்பாங்கில் அரசாங்கம் உள்ளதாக கூறினார்.

மேலும் இலங்கையை பொறுத்தமட்டில் உல்லாச பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version