Home உலகம் கனமழையால் சிறைச்சாலை சேதம் : நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

கனமழையால் சிறைச்சாலை சேதம் : நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

0

நைஜீரியாவில் கனமழையால் சேதமடைந்த சிறைச்சாலையிலிருந்து 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 இச்சம்பவமானது நைஜர் மாநிலத்தின் சுலேஜா என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையில் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.

கணவருடன் சுற்றுலா சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

 சிறையை உடைத்து தப்பியோட்டம்

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,நேற்றையதினம் பெய்த கனமழையால் சிறைச்சாலை சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருந்த வேலி உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளது.

இதனை பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட  கைதிகள் சிறையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதனையடுத்து தப்பிச் சென்ற கைதிகளை தேடும் பணியில் சிறைச்சாலை அதிகாரிகள்,காவல்துறையினர்  ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிநாடொன்றில் அதிக வெப்ப தாக்கம் காரணமாக 6 பேர் பலி!

தேடும் பணி தீவிரம்

இந்நிலையில் இதுவரை 10 கைதிகளை பிடித்துள்ளதுடன்  மற்றவர்களை தேடும் பணி  தீவிரமாக இடம்பெறுகின்றது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சமீப ஆண்டுகளாக நைஜீரியாவில், சிறைகளில் இருந்து கைதிகள் தப்பும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எல்லை மீறும் ரஷ்யா: படையெடுக்கும் நேட்டோ அமைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version