Home உலகம் தொடரும் போர் பதற்றம்! சீனாவுக்கு பயணம் செய்யவுள்ள விளாடிமீர் புடின்

தொடரும் போர் பதற்றம்! சீனாவுக்கு பயணம் செய்யவுள்ள விளாடிமீர் புடின்

0

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் எதிர்வரும் மே மாதம் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் நேற்றைய தினம் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, புடின் குறித்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தீவிரமடையும் போர் நிலை! சீனாவுக்கு பயணம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க அமைச்சர்

சீன பயணம்

கடந்த 2022 ஆம் ஆண்டு சீன அதிபருடன் எல்லையற்ற உடன்படிக்கையொன்றை விளாடிமீர் புடின் கைச்சாத்திட்டிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல்: சி.ஐ.டியின் திரிபோலி படைப்பிரிவை குற்றம்சாட்டும் தமிழ் எம்.பி!

இதனை தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் 2023 ஆம் ஆண்டு இறுதியாக ரஷ்ய அதிபர் சீனாவுக்கு பயணம் செய்திருந்தார். 

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற தேர்தல்களில் வெற்றியீட்டியதை தொடர்ந்து முதல் தடவையாக தற்போது சீனாவுக்கு அவர் பயணம் செய்யவுள்ளமை உலகளாவிய ரீதியில் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கடுமையான அச்சுறுத்தல்

இதேவேளை, 21 ஆம் நூற்றாண்டின் கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் அமைந்துள்ளதென விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான 12 ஆவது சர்வதேச கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும என அவர் வலியுறுத்தியுள்ளார். 

கர்தினாலின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த கோட்டாபய

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version