Home உலகம் கணவருடன் சுற்றுலா சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

கணவருடன் சுற்றுலா சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

0

தனது கணவருடன் சுற்றுலா சென்ற பெண் ஒருவர்  எரிமலை பின்னணியில் புகைப்படம் எடுத்துகொண்டிருந்த போது தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிரபலமான எரிமலை சுற்றுலா பூங்காவை பார்வையிட சென்றபோதே இடம்பெற்றுள்ளது.

இதன்போது  சீனாவை சேர்ந்த ஹூவாங் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

வெளிநாடொன்றில் அதிக வெப்ப தாக்கம் காரணமாக 6 பேர் பலி!

செல்பி மோகம்

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பெண் பிரமிப்பான எரிமலை காட்சிகளை கண்டு பல இடங்களில் நின்று புகைப்படம் பிடித்துள்ளார்.

மேலும் ‘புளூ பயர்’ என்று அழைக்கப்படும் ஒரு எரிமலை சீற்ற நிகழ்வை படம் பிடிப்பதற்காக அவர் ஒரு குன்றின் உயரமான இடத்திற்கு சென்றார்.

இதன்போது, அங்கிருந்து எரிமலை பின்னணியில் தன்னை மறந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த அவர் திடீரென தவறி கீழே விழுந்தார்.

இந்நிலையில், 75 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செல்பி மோகத்தால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பலரும் விமர்சன கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

இலங்கையில் பூர்த்தியடையும் காணாமல் ஆக்கப்பட்டோரின் விசாரணைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version