பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷார் அல்-அசாத்(Bashar al-Assad) நடத்திய கடுமையான சிறைகளை மூடவும், கைதிகளை கொலை அல்லது சித்திரவதை செய்வதில் ஈடுபட்டவர்களை வேட்டையாடவும் திட்டமிட்டுள்ளதாக சிரிய(syria) கிளர்ச்சிப் படைகள் தெரிவித்துள்ளன.
அபு முகமது அல்-ஜொலானி(Mohammed al-Jolani,) என்று அழைக்கப்படும் கிளர்ச்சித் தலைவர் அஹ்மத் அல்-ஷாரா,(Ahmed al-Sharaa) முன்னாள் ஆட்சிக்கால பாதுகாப்புப் படைகளைக் கலைப்பதாகக் கூறினார்.
60,000 பேர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை
அசாத் நடத்திய சிறைகளில் கிட்டத்தட்ட 60,000 பேர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர் என்று இங்கிலாந்தை தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழுவான மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
“நாங்கள் சிரியாவில் அவர்களைப் பின்தொடர்வோம், தப்பியோடியவர்களை ஒப்படைக்குமாறு நாடுகளைக் கேட்டுக்கொள்கிறோம், அதனால் நாங்கள் நீதியை அடைய முடியும்,” என்று அவர் கூறினார்.
எவ்வளவு விரைவாக மறுசீரமைக்கப்படலாம்
நாட்டின் இராணுவ உள்கட்டமைப்பு மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் பற்றிய கவலைகளுக்கு மத்தியில் கிளர்ச்சிப் போராளிகளால் அவை எவ்வளவு விரைவாக மறுசீரமைக்கப்படலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கிளர்ச்சிக் குழுக்களால் விடுவிக்கப்பட்டதை அடுத்து, உறவினர்களைத் தேடி சிரியர்கள் தமது அன்புக்குரியவர்களை தேடி மிகவும் கொடூரமான சைட்னாயா சிறைக்கு விரைந்தனர் .