Home இலங்கை சமூகம் அச்சமடைய வேண்டாம்.. வடக்கு – கிழக்கில் வானிலை நிலவரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அச்சமடைய வேண்டாம்.. வடக்கு – கிழக்கில் வானிலை நிலவரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

இன்று இரவுடன் வடக்கு – கிழக்கில் வானிலை நிலைமை சீரடைந்து விடும் என்றும் மக்கள் அதிகம் அச்சமடைய வேண்டாம் என்றும் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், “டிட்வா புயலின் உள்வளையத்தின் பின்பகுதி கடலினுள் சென்று கொண்டிருக்கின்றது.

அதனால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னாரில் காற்று சற்று வேகமாக வீசுகின்றது. சற்று கனமழையும் கிடைத்து வருகின்றது.

அவதானம் அவசியம்.. 

இது புயலின் ஆற்றல் மிக்க உள்வளையம் கடலுக்கு செல்வதன் விளைவே இந்த வேகமான காற்று வீசுகை மற்றும் சற்று கனமழை.
அச்சப்பட எதுவமில்லை.

ஆனால், ஏற்கெனவே மண் நெகிழ்வான நிலையில் இருப்பதனால் மரங்கள் பாறி விழக்கூடும். மின் கோபுரங்கள் சரிந்து மின் வடங்கள் அறுந்து விழக்கூடும்.

ஆகவே இவை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். இன்று இரவுடன் இந்த வானிலை நிலைமையும் சீரடைந்து விடும்” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version