Home இலங்கை சமூகம் நாடளாவிய ரீதியில் தீபாவளி கொண்டாட்டங்கள்

நாடளாவிய ரீதியில் தீபாவளி கொண்டாட்டங்கள்

0

உலக வாழ்  தமிழர்கள் இன்றையதினம் தீபாவளி பண்டிகை வெகு  சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையிலும் நாடளாவிய ரீதியில்  மக்கள் தீபாவளி  கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதுடன், மக்கள் புத்தாடை அணிந்து ஆர்வமாக ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபடுவதைக் காணக் கூடியதாக உள்ளது.

இதன்படி, கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளன.

மேலும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவனாலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள்
பொலிஸாரினால் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தீபாவளி தினத்தை முன்னிட்டு வட்டுக்கோட்டை பொலிசாரின் ஏற்பாட்டில் பண்ணாகம்
வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்றையதினம் இடம்பெற்றன.

நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் வேண்டக இந்த பூஜை வழிபாடுகள்
மேற்கொள்ளப்பட்டன. 

இதேவேளை, மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை  இன்று வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.

ஹட்டன் பகுதியில் அட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின்
பிரதான குருக்கள் ஷன் மதுரன் குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய
வழிபாடுகள் நடைபெற்றன.   

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும்
இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட
வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Source: https://tamilwin.com/article/diwali-festival-1730372496

NO COMMENTS

Exit mobile version